இரவு நேரத்தில் அதிகமாக வறட்டு இருமலால் அவதிப்படறீங்களா? அதனால் தூக்கம் பாதிக்கப்படுகிறதா? அதற்கு காரணம் என்ன? அதை எளிமையாக எப்படி நிறுத்தலாம் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
மழைக் காலம் தொடங்கி விட்டாலே காற்று மற்றும் நீரால் பரவும் தொற்றுக்கள் அதிகரிக்கும். அதனால் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக வறட்டு இருமல் ஏற்பட்டால் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் சிரமப்பட வேண்டியிருக்கும். என்ன தான் மாத்திரைகள், மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் கட்டுக்குள் வராத வறட்டு இருமலும்கூட கீழ்வரும் வீட்டு வைத்தியங்களால் கட்டுப்படுத்த முடியும்.
வறட்டு இருமல் எதனால் ஏற்படுகிறது?

வறட்டு இருமல் உண்டாவதற்கு பருவ கால மாற்றங்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றன.
குறிப்பாக மழைக்காலத்தில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்களால் இந்த பிரச்சினை அதிகமாக ஏற்படுகிறது.
அதைத்தாண்டி அசிடிட்டி பிரச்சினை இருப்பவர்களுக்கும் கூட இந்த வறட்டு இருமல் ஏற்படலாம். இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வர கீழ்வரும் வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க…
தேன்

தேன் காலங்காலமாக வறட்டு இருமலுக்குப் பயன்படுத்தபபடும் ஒரு வீட்டு வைத்தியமாகும்.
இதிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேடடரி பண்புகள் தொண்டையில் ஏற்படும் தொற்றுக்களின் ஆபத்தைக் குறைக்கச் செய்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் வறட்டு இருமலைக் குறைக்க தேன் மிகச்சிறந்த அருமருந்து.
வறட்டு இருமல் உண்டாகும் போது தேனை காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் வீதம் சாப்பிட்்டு வர கட்டுக்குள் வரும்.
மஞ்சள்

மஞ்சளில் ஆன்டி ஆகசிடணட்டுகள் அதிகமாக இருக்கின்றன. மஞ்சளில் ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆனடி இன்ஃபிளமேட்டரி பண்புகள் அதிகமாக இருக்கின்றன.
ஒரு கப் வெதுவெதுப்பான பாலில் கால் ஸ்பூன் அளவு மஞ்சள் பொடியைச் சேர்த்து, அதில் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர, தொண்டை வலி மற்றும் வறட்டு இருமல் குறைய ஆரம்பிக்கும்.
இஞ்சி

இஞ்சியில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்து இருக்கின்றன.
நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்தும். தொண்டையில் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்கும்.
ஒன்றரை கப் தண்ணீரில் ஒரு இன்ச் அளவு இஞ்சியை தோல் சீவி, துருவிவிட்டு சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
நன்கு கொதித்ததும் வடிகட்டினால் இஞ்சி டீ தயார். இதை காலை மற்றும் இரவு என இரண்டு வேளை குடித்து வர வறட்டு இருமல் குறையும்.
நீராவி பிடித்தல்

மழைக்காலங்களில் ஏற்படும தொற்றுக்களில் இருந்து உடனடி நிவாரணம் பெற நினைத்தால் அதற்கு மிகச்சிறந்த தீர்வாக நீராவி பிடித்தலை சொல்லலாம்.
மருத்துவர்கள் மருந்தே கொடுத்தாலும் நீராவி பிடிக்கச் சொல்லி அறிவுறுத்துவார்கள். சூடான நீராவி நாசி துவாரங்களுக்குள் செலலும் போது சுவாசக் குழாய்களில் இருக்கிற நோய்த் தொற்றுக்கள் அழிந்து பொக வாய்ப்பு உண்டு.
உப்பு நீர் கொப்பளித்தல்,

வாய், சுவாச மண்டலம், நுரையீரல் ஆகியவற்றில் ஏற்படடிருக்கும் தொற்றுக்களை அழிக்கும் தன்மை உப்புக்கு உண்டு.
வறட்டு இருமலால் அவதிப்படுகிறவர்களுக்கு இருமி இருமி தொண்டையில் கடுமையான வலியும் இருக்கும். இதை சரிசெயய இந்த உப்பு நீர் கொப்பளித்தல உதவி செய்யும்.
ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 2 ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும்.
மசாலா டீ

இஞ்சி, இலவங்கப்பட்டை, தைம் இலைகள், கிராம்பு, சுக்கு, கெமோமில், துளசி ன ஏதாவது ஒரு மூலிகை டீயை காலை, மாலை என இரண்டு வேளையும் குடித்து வர தொண்டை வலி மற்றும் வறட்டு இருமல் குறையும்.
துளசி டீயில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க நோயெதிர்ப்பு மண்டலமும் பலப்படும.வறட்டு இருமல். தொண்டையில் எற்படும் தொற்றுக்களையும் குறைக்கும்.
புதினா

புதினாவில் உள்ள மெந்தால் ஒருவித புத்துர்ச்சியை ஏற்டுத்தும். புதினாவில் உள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் தொண்டை வலி மற்றும் தொற்றுக்களைக் குறைக்கும்.
இரவு துங்கச் செல்லும்முன் புதினா டீ குடித்து வர தொண்டையில் உள்ள தொற்றுக்கள் அழிவதோடு வறட்டு இருமலும் குறைய ஆரம்பிக்கும்.

