Posted in

ஆண்களின் விறைப்புத்தன்மை நீடிக்க உதவும் 5 ஆயுர்வேத மூலிகைகள்.

பாலியல் உறவில் ஈடுபட முடியாத அளவுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை இருந்தால் சிகிச்சையோடு சில மூலிகைகளும் உதவும். இத்தகைய பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்களுக்கு ஆயுர்வேதம் சில மூலிகைகளை பரிந்துரைக்கிறது. அவை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

விறைப்பு செயலிழப்பு அல்லது ஆண்மைக் குறைவு என்று அழைக்கப்படும் இந்நிலை பாலியல் வாழ்க்கையில் பிரச்சனைகளை உண்டு செய்யலாம். விறைப்புத்தன்மை நீடிப்பதில் சிக்கல் இருந்தால் சிகிச்சைக்கு செல்வதற்கு முன்பு என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்கிறீர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். இதன் மூலம் மருத்துவர் காரணங்களை கண்டறியவும் சிகிச்சை அளிக்கவும் எளிதாக இருக்கும் . விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் மூலிகைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

​ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு ஷிலாஜித்​

ஷிலாஜித் ஒட்டுமொத்த விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை அதிகரிக்க செய்கிறது. ஆண் கருவுறுதல் அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக இது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க கூடும். எனினும் இதை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி தேவை.

ஷிலாஜித் பிறப்புறுப்பு பகுதி உட்பட உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. விறைப்புத்தன்மை அடையவும் அதை பராமரிக்கவும் முக்கியமானது. ஷிலாஜித் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவும்.

​ஆண்களின் விறைப்புத்தன்மை பாதுகாக்க பூனைக்காலி விதை உருண்டை​

பூனைக்காலி விதை உருண்டை டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறது. டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி பாலியல் வாழ்க்கைக்கு வேண்டிய முக்கிய ஹார்மோன். ஆண் மற்றும் பெண் இருவரது பாலுணர்வுக்கும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இது பயனுள்ளதாக இருந்ததற்கான அறிவியல் காரணங்களில் ப்ரோலாக்டின் என்னும் ஹார்மோன் ஒன்று. இது ஆண் பெண் இருவருக்கும் இனப்பெருக்க டானிக் ஆக சொல்லப்படுகிறது. விறைப்புத்தன்மை குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள தீர்வாக இருக்கும்.

​ஆண்களின் விறைப்புத்தன்மைக்கு வெள்ளை முசிலி​

வெள்ளை முசிலி ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யலாம். இது லிபிடோ,சகிப்புத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த பாலியல் செயல்திறனை மேம்படுத்த செய்கிறது. மேலும் விறைப்பு செயலிப்புக்கு சிகிச்சையளிப்பதில் இவை பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. விறைப்புத்தன்மை நிலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த செய்கிறது. விந்தணு இயக்கம் மற்றும் கருவுறுதல் அதிகரிக்கிறது. பாலியல் செயலை நீடிக்கும் என்றும் அறியப்பட்டுள்ளது.

​ஆண்களின் விறைப்புத்தன்மை நீடிக்க ஷதாவரி​

ஷதாவரி பெண்களின் இனப்பெருக்க அமைப்பு போன்று ஆண்களுக்கும் நன்மை செய்யலாம். ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது நன்மை பயக்கும். இதன் வேர் பொடி விந்தணு விந்தணு வடிவம், விந்தணு எண்ணிக்கை, விந்தணு இயக்கம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இயற்கையான ஆக்ஸிஜனேற்றமாக இருப்பத இது டெஸ்டோஸ்டிரோன் மற்றும் லுடினைசிங் ஹார்மோன் என்னும் ஆண் ஹார்மோன்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. ஆண் உறுப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்துகிறது. ஆண் இனப்பெருக்க அமைப்பில் இது பயனுள்ளதாக இருக்கும். இது விறைப்புத்தன்மையை எதிர்த்து போராடுகிறது. விறைப்புத்தன்மை மற்றும் முன்கூட்டிய விந்துதள்ளல் போன்றவற்றுக்கு உதவுகிறது.

​ஆண்களின் விறைப்புத்தன்மை நீடிக்க அஸ்வகந்தா​

அஸ்வகந்தா விறைப்புத்தன்மைக்கு சிறந்த சிகிச்சையாக உள்ளது. பாலியல் உந்துதலை மேம்படுத்த பழங்காலம் முதலே பயன்படுத்தப்படுகிறது. விறைப்புத்தன்மை தக்க வைக்க இயலாமைக்கு சிகிச்சையாக சொல்லப்படுகிறது. இதற்கு சரியான அறிவியல் ஆதாரம் இல்லை என்றாலும் விறைப்புத்தன்மைக்கு அஸ்வகந்தா பயன்பாடு குறித்து சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

குறிப்பு – இங்கு குறிப்பிட்டுள்ள மூலிகைகள் எல்லாமே பொதுவான அதன் நன்மைகள் குறித்தவை. விறைப்புத்தன்மை நீடிக்க இதை சுயமாக பயன்படுத்த கூடாது. காரணங்கள் அறிந்து மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த மூலிகைகள் எடுத்துகொள்ள வேண்டும்.

Normal Sugar Level : சுகர் இருந்தால் 6 மாதம் ஒரு முறை A1C டெஸ்ட் எடுங்க.. நார்மல் அளவு.. எப்படி கட்டுப்படுத்துவது.. எல்லாமே விவரமா இருக்கு..!